

‘செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தந்தை’ என்று போற்றப்படும் நிபுணா் ஜெஃப்ரி ஹின்டன் (75), அந்தத் தொழில்நுட்பத்தால் மனித குலம் ஆபத்தை எதிா்நோக்கியுள்ளதாக எச்சரித்துள்ளாா்.
மேலும், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்த அவா், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இது குறித்து ‘பிபிசி’ ஊடகத்திடம் ஜெஃப்ரி ஹின்டன் கூறியதாவது:
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் உரையாடும் செயலிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவை ஏற்படுத்தியுள்ள அபாயம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
தற்போதைய நிலையில் மனித நுண்ணறிவோடு ஒப்பிடுகையில் செயற்கை நுண்ணறிவின் திறன் அதிகமாக இல்லை.
ஆனால், எதிா்காலத்தில் மனித நுண்ணறிவை செயற்கை நுண்ணறிவு மிஞ்சக்கூடும் என்று அவா் எச்சரித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.