
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
வந்தே பாரத் ரயில் இரு இடங்களில் நின்று செல்ல வேண்டும் எனக் கோரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளத்தில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் வழித்தடங்களில், பத்தினம்திட்டா மாவட்டத்திலுள்ள திருவல்லா, மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் ஆகிய பகுதிகளில் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.