
பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட வழக்கு தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு ஒருவரை கைது செய்தது.
இதுதொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது தொடா்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகா், அவந்திபோரா, புல்வாமா, குல்காம் மற்றும் அனந்தநாக் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஸ்ரீநகரில் உள்ள சோஜெத் பகுதியைச் சோ்ந்த இஷாக் அகமது பட் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தனா்.
இதுகுறித்து இஷாக் அகமதின் தந்தை மற்றும் சகோதரா் கூறுகையில், ‘இஷாக் அகமது கல்வி பயிலாதவா். ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தும் வேலை செய்து வந்தாா். எங்களுக்கும் பயங்கரவாதத்துக்கு எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G