
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்து வருகின்றது. அதன்படி, ஒருநாள் பாதிப்பு 3,962 ஆகவும், மொத்த பாதிப்பு 4,49,56,716 ஆகவும் உள்ளது.
கரோனாவுக்கு மேலும் 20 பேர் இறந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 5,31,584 ஆக உள்ளது. மேலும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 36,244 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,43,92,828 ஆக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...