
புதுதில்லி: நீட் தேர்வு 2023-க்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எப்படி பதவிறக்கம் செய்வது?
1. neet.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்
2. முகப்புப் பக்கத்தில் "Download Admit Card for NEET (UG)- 2023 is Live Now" என்பதை கிளிக் செய்யவும்.
3. அதில், உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பின் எண் உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து சமர்ப்பிக்கவும்.
4. திரையில் உங்களது நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு தோன்றும்.
5. அதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நுழைவுச் சீட்டின் பின்புறம், நீட் தேர்வு மற்றும் அதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
நீட் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ள 499 நகரங்களில் நடைபெறுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.
மாணவா்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் என்டிஏ மின்னஞ்சல் முகவரியையோ 011-40759000 என்ற உதவி எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.