
தோஹா டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா(25). டோக்கியோவில் அசத்திய இவர், ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கத்தாரின் தோஹாவில் 2023-ஆம் ஆண்டின் முதல் டைமண்டு லீக் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 88.67 மீட்டர் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
தோஹா டைமண்டு லீக் தடகளத்தில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துகள். அவரது முயற்சிகள் மேலும் மேலோங்கட்டும் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சோப்ரா, இந்த முறை தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.