
கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் காங்கிரஸ் சார்பில் 223, பாஜக சார்பில் 224, மஜத சார்பில் 209, பகுஜன் சமாஜ் சார்பில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தவிர 918 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இதேபோன்று காங்கிரஸ் கட்சியில் அக்கசியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் பிரசாரம் மேற்கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...