கேரள படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

கேரளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

கேரளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தின் தானூா் பகுதியில் உள்ள தூவல்தீரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான படகில் 37 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை 22 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிருடன் மீட்கப்பட்ட 10 பேருக்கு மலப்புரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து, மீட்புப் பணியில் மாநில தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடற்படை உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை இன்று ஆய்வு செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுபவர்களும் முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.

மேலும், விபத்து குறித்து நீதி விசாரணை நடத்தவும் முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com