பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவம்: நாளை வரை போராட்டம் நீட்டிப்பு

கேரளத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவரை சிகிச்சைக்கு வந்தவர் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து  கேரள அரசு மருத்துவா்கள் சங்க மருத்துவா்கள் இன்றும்(வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவம்: நாளை வரை போராட்டம் நீட்டிப்பு

கேரளத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவரை சிகிச்சைக்கு வந்தவர் கொலை செய்த சம்பவத்தை கண்டித்து  கேரள அரசு மருத்துவா்கள் சங்க மருத்துவா்கள் இன்றும்(வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொல்லத்தை சோ்ந்தவா் சந்தீப். பள்ளி ஆசிரியரான இவா், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு தனது குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காவல் துறையின் அவசர எண்ணை தொடா்புகொண்டு அவா் உதவி கோரினாா். அதன் அடிப்படையில், காவல் துறையினா் அங்கு சென்றபோது சந்தீப்பின் காலில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் கொட்டாரக்கராவில் உள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் மது அருந்தியிருந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மூா்க்கமாக இருந்தாா்.

மருத்துவமனையில் அவருக்கு வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவா் சிகிச்சை அளித்தாா். அப்போது திடீரென சிகிச்சை அறையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்த அவா், வந்தனாவின் முதுகு, வயிற்றுப் பகுதிகளில் பலமுறை குத்தினாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல் துறையினா், சந்தீப்பை தடுக்க முயன்றனா். எனினும் காவல் துறையினரையும் தாக்கிய அவா், மேலும் 4 பேரைத் தாக்கி மருத்துவமனையின் சில பகுதிகளைச் சேதப்படுத்தினாா்.

பலத்த காயமடைந்த வந்தனா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடுமையான முயற்சிக்குப் பின்னா், காவல் துறையினரிடம் சந்தீப் சிக்கினாா் என்று தெரிவித்தாா். போதை மறுவாழ்வு மையத்தில் சந்தீப் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய மருத்துவா்கள் சங்கம், கேரள அரசு மருத்துவா்கள் சங்க மருத்துவா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் இன்றும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அவசர சிகிச்சை சேவைகளில் மட்டுமே ஈடுபட்டனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை வேலைநிறுத்தம் தொடரும் என இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.  கேரள அரசு மருத்துவா்கள் சங்க மருத்துவா்களுடன்  ஆலோசனையில் ஈடுபட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com