
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பகுதியை காணத் தவறிய 36 மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுதியை விட்டு வெளியே செல்ல சண்டீகரின் தேசிய செவிலியர் கல்வி நிறுவனம் தடை விதித்துள்ளது.
முதல் மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கட்டாயமாக காண வேண்டும் என முன்பே அறிவித்திருந்த நிலையில், அதனை பின்பற்றாததால் நடவடிக்கை எடுத்ததாக நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகம் நாட்டின் பல பகுதிகளிலும் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.