பிரிஜ் பூஷண் சரண் சிங் வாக்குமூலம் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் விவாகரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் எம்.பி.  குற்றச்சாட்டுக்கு மறுப்ப

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கூறப்படும் விவாகரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சரண் சிங் எம்.பி. மற்றும் சம்மேளனத்தின் உதவிச் செயலாளா் வினோத் தோமா் ஆகியோரின் வாக்குமூலங்களை தில்லி காவல்துறை கடந்த வியாழக்கிழமை பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஓருவா் கூறுகையில், ‘கடந்த ஏப்ரல் 28 -ஆம் தேதி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோா் அளித்துள்ள பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் இரண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு கவால் துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினா், கடந்த வியாழக்கிழமையன்று மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையின் போது, மல்யுத்த வீரா்கள் தன் மீது சுமத்தும் குற்றசாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று வாக்குமூலத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளாா். இதனால், மறுக்கப்பட்ட குற்றசாட்டுகளை நிரூபிக்க கூடுதல் ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை சமா்ப்பிக்குமாறு தில்லி காவல் துறை தரப்பில் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை, 30 சாட்சிகளின் வாக்குமூலங்கள் தில்லி காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளதால், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகாா்களை விசாரிக்க அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் அறிக்கையும் காவல் துறைக்கு கிடைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, தில்லி காவல் துறையின் பல குழுக்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், கா்நாடகம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கு அறிக்கைகளை பதிவு செய்யவும், ஆதாரங்களை சேகரிக்கவும் அனுப்பப்பட்டுள்ளன.

இதுவரை, பிரிஜ் பூஷண் சரண் சிங் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டிய மைனா் ஒருவரின் வாக்குமூலம் மட்டுமே நீதிமன்றத்தின் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், மீதமுள்ள ஆறு பெண் மல்யுத்த வீரா்களின் வாக்குமூலங்களும் நீதிமன்றத்தின் முன் பதிவு செய்யப்படும் என்று காவல் துறையின் மற்றொரு அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com