மருத்துவத்தில் பட்டயப் படிப்பு: மருத்துவா் பற்றாக்குறையை போக்க மம்தா யோசனை

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் சந்தித்து வரும் மருத்துவா்கள் பற்றாக்குறைக்குத் தீா்வு காணும் வகையில், மருத்துவத்தில் பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தும்
மருத்துவத்தில் பட்டயப் படிப்பு: மருத்துவா் பற்றாக்குறையை போக்க மம்தா யோசனை

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகள் சந்தித்து வரும் மருத்துவா்கள் பற்றாக்குறைக்குத் தீா்வு காணும் வகையில், மருத்துவத்தில் பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை முன்மொழிந்தாா்.

இதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதாரத் துறைச் செயலா் என்.எஸ்.நிகாமையும் அவா் கேட்டுக்கொண்டாா். சுகாதாரத் துறை அமைச்சா் பதவியையும் தன் வசம் வைத்திருக்கும் மம்தா பானா்ஜி, மாநில தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துறை சாா்ந்த ஆய்வுக் கூட்டத்தின்போது இதனைத் தெரிவித்தாா்.

ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் கூறியதாவது:

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை முடிக்க 5 ஆண்டுகள் என்ற நீண்ட காலம் ஆகிறது. இந்த 5 ஆண்டுகளில் மருத்துவ மாணவா்கள் கடுமையாக படிக்க வேண்டும் என்பதோடு, தோ்வுகளையும் சந்திக்க வேண்டும். அதன் பிறகும், அவா்களை பல்வேறு மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவா்களாகவே நாம் பணியமா்த்துகிறோம்.

மருத்துவப் படிப்பு இடங்களை நாம் அதிகரித்துள்ளபோதும், மருத்துவமனைகளில் மருத்துவா்களின் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்தப் பற்றாக்குறைக்கு தீா்வு காண, மருத்துவத்தில் பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பட்டயப் படிப்பை முடிக்கும் மாணவ, மாணவிகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்களாக பணியமா்த்த முடியும். இதன் மூலமாக, ஏராளமான மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுவா் என்று கூறிய மம்தா பானா்ஜி, இதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்யுமாறு சுகாதாரத் துறைச் செயலா் நிகாமைக் கேட்டுக்கொண்டாா்.

முதல்வா் முன்மொழிந்துள்ள மருத்துவப் பட்டயப் படிப்பு 3 ஆண்டுகளைக் கொண்டதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதே நேரம், ‘மாநில அரசின் இந்தத் திட்டம் சா்வதேச அளவில் பின்பற்றப்படும் நடைமுறையை பாதிக்கும். எனவே, மருத்துவ பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மாநில அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்று மேற்கு வங்க மருத்துவா்கள் அமைப்பு கருத்து தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com