ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலி

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பலியானது. 
ஆந்திராவில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலி


ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பலியானது. 

ஒடிசாவில் இருந்த வந்த 6 யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். 

இந்நிலையில், யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்துள்ளனர். 

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கத்ரகெடா கிராமத்தில் உணவைத் தேடி விளைநிலங்களை நோக்கி வந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலியாகின, 2 யானைகள் நூலிழையில் உயிர்தப்பின. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, மார்ச் 7 ஆம் தேதி, தமிழகத்தில் பாலக்கோடு அருகே இரண்டு குட்டி யானைகளுடன் சுற்றி திரிந்த மூன்று யானைகள் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் உரசியதில் மூன்று யானைகள் மின்சாரம் பாய்ந்து இறந்தன. இதுதொடர்பாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார். 

கம்பைநல்லூர் வி.பள்ளிப்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்ற போது அப்பகுதியில் சென்ற  தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தாழ்வான உயர் அழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தமிழக சுற்றுச்சூழல் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com