
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அவரது மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேரா ஆகியோா், ஹிமாசல பிரதேசத்துக்கு தனிப்பட்ட பயணமாக வெள்ளிக்கிழமை வந்தனா்.
சிம்லாவின் சாப்ரா பகுதிக்கு ஹெலிகாப்டா் மூலம் வந்திறங்கிய அவா்களை முதல்வா் சுக்விந்தா் சிங் சுக்கு வரவேற்றாா். இருவருக்கும் நினைவுப்பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை அவா் வழங்கினாா்.
பின்னா், சாப்ரா பகுதியில் உள்ள வதேராவின் இல்லத்துக்கு இருவரும் சென்றனா். குடியரசுத் தலைவரின் கோடைகால பயண மாளிகைக்கு அருகே அமைந்துள்ள இந்த இல்லம், ஆங்கில மற்றும் மலைப்பகுதி கட்டுமான கலைகளின் கலவையாகும். அடா்ந்த ஊசியிலை காடுகளுக்கு இடையே அமைதியான சூழலில் இது அமைந்துள்ளது.