பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காங்கிரஸின் திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன: அசோக் கெலாட்

எப்போதெல்லாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காங்கிரஸின் திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன: அசோக் கெலாட்

எப்போதெல்லாம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் காங்கிரஸால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்படுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த குற்றச்சாட்டுக்கு உதாரணமாக பார்மர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தினை தெரிவித்தார். தாமதப்படுத்தப்பட்டதால் இந்த திட்டத்துக்கு அதிக அளவில் கூடுதலாக பணம் செலவானதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஆழ்வார் மாவட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தை பாஜக எதிர்க்கிறது. இந்த திட்டம் ஆழ்வார் மாவட்டம் உட்பட 13 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். எனது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து வருகிறது. இந்தத் திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார். இது தொடர்பாக பிரதமருக்கு நான் கடிதங்களை எழுதியுள்ளேன். ஆனால், எனக்கு எந்த ஒரு பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தால் காங்கிரஸின் திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. வருகிற ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com