மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடகத் தேர்தல் மட்டுமல்ல... இடைத்தேர்தல்களிலும் பாஜக பின்னடைவு!

பஞ்சாப் மக்களவைத் தொகுதி, ஒடிசா, உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :13 மே 2023, 6:52 am

பஞ்சாப் மக்களவைத் தொகுதி, ஒடிசா, உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது. 

கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நண்பகல் மணி நிலவரப்படி காங்கிரஸ்- 117, பாஜக-75, மஜத -25, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் நீண்ட நேரமாக முன்னிலையில் இருந்து வருவதால் அக்கட்சி ஆட்சியமைக்கும் சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில் இன்று பஞ்சாபில் ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும், ஒடிசாவில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உத்தர பிரதேசத்தில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. 

பஞ்சாபில் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. 

உத்தர பிரதேசத்தில் சான்பே(Chhanbey) சட்டப்பேரவைத் பேரவைத் தொகுதியில் சமாஜவாதி கட்சியும், சுவார்(Suar) தொகுதியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அப்னா தளம் கட்சியும் முன்னிலையில் உள்ளது. 

ஒடிசாவின் ஜார்சுகுடா(Jharsuguda) சட்டப்பேரவைத் தொகுதியில் பிஜு ஜனதா தளம் முன்னிலையில் இருந்து வருகிறது. 

மேகாலயாவின் சோஹியாங் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.