
கோப்புப்படம்
ஆந்திரப் பிரதேசத்தின், கடப்பா மாவட்டத்தில் திருமலை கோயிலுக்குச் சென்று திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பென்சியாநத்தபுரம் கிராமத்தில் திருப்பதி கோயிலுக்குச் சென்றுவிட்டு 12 பேர் கொண்ட குழு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இரும்பு தாது ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து அதிகாலை காலை 5.30 மணியளவில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடைபெற்றதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஏழுமலையான் சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தாடிபத்ரி நோக்கி இந்தக் குழு திரும்பிக்கொண்டிருந்தனர்.
காயமடைந்தவர்கள் அனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், இறந்தவர்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விபத்து நடந்த இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...