மியான்மரில் புயல் பாதித்த 17 நகரங்கள் இயற்கை பேரிடர் மண்டலமாக அறிவிப்பு!

ராக்கைன் மாநிலத்தில் உள்ள 17 நகரங்களை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக மியாமன் மாநில நிர்வாகக் குழு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 
மியான்மரில் புயல் பாதித்த 17 நகரங்கள் இயற்கை பேரிடர் மண்டலமாக அறிவிப்பு!

ராக்கைன் மாநிலத்தில் உள்ள 17 நகரங்களை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக மியாமன் மாநில நிர்வாகக் குழு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அதி தீவிர புயலான மோக்கா ராக்கைன் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளைப் பெருமளவில் தாக்கியுள்ளது. 

கியாக்பியோ, மனவுங், ராம்ரீ, ஆன், சிட்வே, பௌக்டாவ், பொன்னக்யுன், ரதேடாங், க்வா, டௌங்குப், தாண்ட்வே, மௌங்டாவ், புத்திடாங், கியாக்டாவ், மின்பியா, ம்ராக்-யு மற்றும் மைபோன் ஆகிய 17 நகரங்கள் புயல் கடுமையாகப் பாதித்துள்ளது. 

இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 11-வது பிரிவின்படி, இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக இந்த நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மோக்கா புயலால் உயிர்ப்பலி, உடைமை இழப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்பட்டதால் ராக்கைனில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட இந்த நகரங்களில் இயல்புநிலை திரும்புவதில் பல நாள்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மியான்மரின் வானிலை அறிக்கையின் படி, 

அதி தீவிர சூறாவளி புயல் தற்போது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து சின் மற்றும் மாக்வே பிராந்தியத்தைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு முழுவதும் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. 

மத்திய மாக்வே பிராந்தியத்தில் உள்ள சௌக் மற்றும் சின்பியுக்யூன் ஆகிய இரண்டு நகரங்களிலும் 55 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 

கனமழை, நிலச்சரிவு மற்றும் புயல் தாக்கம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com