

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சந்தித்தார்.
புணேவில் உள்ள பிரதிபா பாட்டீல் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அவரது கணவர் டாக்டர்.தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீல், 2007 முதல் 2012 வரை பதவி வகுத்தார். இவரது கணவர் தேவிசிங் மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.