
மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் 2022-23 மார்ச் காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் 86 சதவீதம் உயர்ந்து ரூ.320 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில், 2021-22 முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) மாதத்தில் அதன் லாபம் ரூ.172 கோடியாக பதிவு செய்திருந்தது.
இதுகுறித்து மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நான்காவது காலாண்டில் நிகர வருவாய் ரூ.1,224 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,551 கோடியானது. மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், 2021-22ஆம் ஆண்டில் ரூ.752 கோடியுடன் ஒப்பிடும்போது இதன் லாபம் ரூ.1,328 கோடியாக உள்ளது.
நிகர வருவாய் 2021-22 நிதியாண்டில் ரூ.4,981 கோடியிலிருந்து 2023 நிதியாண்டில் ரூ.5,902 கோடியாக உயர்ந்துள்ளது. மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த ஆண்டில் ஒரு பங்குக்கு ரூ.1 இறுதி ஈவுத்தொகைக்கு அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2.49 சதவீதம் சரிந்து 506.90 ரூபாயாக முடிவடைந்தது.