

தில்லியில் இருந்து செவ்வாய்க்கிழமை சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தில்லியிலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ-302 விமானம் செவ்வாய்க்கிழமை சிட்னி புறப்பட்டுச் சென்றது. திடீரென நடுவானில் ஏற்பட்ட ‘டர்புளன்ஸ்’ பிரச்னையால் 7 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.
உடனடியாக விமானத்தில் பயணித்த மருத்துவர்களின் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு விமான பணியாளர்கள் முதலுதவி அளித்துள்ளனர்.
இதையும் படிக்க | களிமண் குளிர்சாதனப் பெட்டி! கோவையில் ஆர்வமுடன் வாங்கும் மக்கள்
தொடர்ந்து, சிட்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் 3 பேருக்கு மட்டுமே சிகிச்சை தேவைப்பட்டது. அவர்களுக்கு விமான நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.