சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

39 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, குற்றமிழைத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்


புது தில்லி: 39 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, குற்றமிழைத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஜெகதீஷ் டைட்லருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகக் கூறி, குற்றப்பத்திரிகையில் அவருடைய பெயரை சிபிஐ சேர்த்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு வடக்கு தில்லி பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சாட்சிகளை திசைதிருப்ப முயன்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் கீழ், குரல் பதிவுகளை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்தியிருந்தது. 

சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில், மூன்று பேரையும்  கொலை செய்யும்படி, வன்முறை கும்பலை தூண்டியதாக காங்கிரஸ் தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com