பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட ஜப்பான் ஓவியம்!

ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரபல ஓவியர் ஹிரோகோ டகாயாமாவை நேரில் சந்தித்துப் பேசினார்
பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட ஜப்பான் ஓவியம்!

ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரபல ஓவியர் ஹிரோகோ டகாயாமாவை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு டகாயாமா வரைந்த ஓவியம் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது. 

ஹிந்து கடவுள் கிருஷ்ணரை நினைவூட்டும் விதமாக அமைந்திருந்த அந்த ஓவியத்தில் இந்தியாவின் ஆன்மா பிரதிபலிப்பதாகவும் இரு நாடுகளின் கலாச்சார ஒத்துழைப்பை பறைசாற்றும் விதமாக ஓவியம் இருப்பதாகவும் மோடி தெரிவித்தார். 

இது தொடர்பாக பேசிய ஓவியர் ஹிரோகோ டகாயாமா, ஓவியம் மிகவும் அழகாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 42 ஆண்டுகளுக்கு முன்பு முதல்முறை இந்தியவிற்கு பயணம் செய்தேன். இந்தியர்களின் ஆன்மிக ஈடுபாடும், வழிபாட்டு முறையும் வெகுவாக என்னைக் கவர்ந்தது. அதிலிருந்து இந்திய மக்களையும் அவர்களின் கலாசாரத்தையும் கவனித்து வருகிறேன் எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் பயணம்

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி, 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தில், ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கிறார். 

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை தனியே சந்தித்து இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்று(சனிக்கிழமை) காலை ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தி சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்து மலர் தூவி மரியாதை. செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த ஜப்பான் வாழ் தமிழர்களுடன் உரையாடினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com