ரூ.2,000 நோட்டு மாற்ற வங்கிகளுக்கு வழிகாட்டுதல்கள்

நாளை முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 
reserve074420
reserve074420

நாளை முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

2,000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2,000 நோட்டு மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான குடிநீர், உரிய இட வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும். தினமும் எவ்வளவு ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுகின்றன என்பது குறித்த தகவல்களை முறையாக சேகரிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாகக் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். அது பெரும் விமா்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com