கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

கர்நாடகத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். 
Published on

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து பெங்களூரு​வில் கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் அதைத் தொடர்ந்து 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தற்காலிக அவைத் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இதையடுத்து தற்காலிக அவைத்தலைவர் முன்னிலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக்கொண்டனர். 

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரைத் தொடர்ந்து மற்றவர்களும் பதவியேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com