சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் நிகர நஷ்டம் ரூ.81.99 கோடியாக உயர்வு 

சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட், 2023 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், நிகர இழப்பு ரூ.81.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் நிகர நஷ்டம் ரூ.81.99 கோடியாக உயர்வு 

புதுதில்லி: சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட், 2023 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், நிகர இழப்பு ரூ.81.99 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ரூ.71.05 கோடி நிகர இழப்பை மேற்கொண்டது என்று சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.25.24 கோடியிலிருந்து ரூ.47.69 கோடியாக அதிகரித்துள்ளது. நான்காவது காலாண்டில் மொத்த செலவினங்கள் ரூ.96.51 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.140.41 கோடியானது.

2023ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.222.58 கோடியாக இருந்தது. இது 2023ம் நிதியாண்டில் ரூ.203.4 கோடியாக இருந்தது.

2022ம் நிதியாண்டில் ரூ.137.25 கோடியாக இருந்த செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 2023ஆம் நிதியாண்டில் ரூ.238.78 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com