
அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்கில் ரூ. 2,000 நோட்டுகளை செலுத்தலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: நாட்டில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை செவ்வாய்க்கிழமை முதல் செப்.30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அஞ்சல் சேமிப்பு கணக்குகளில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்தலாம். அதேநேரத்தில் ரூ,2,000-க்கு சில்லறை நோட்டுகளாகப் பெற இயலாது என்றாா் அவா்.