
புதுதில்லி: ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 37 சதவீதம் சரிந்து ரூ.2,411 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
2021-22ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்நிறுவனம் ரூ.3,860 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.56,209 கோடியாக உள்ள நிலையில், செலவினங்கள் ரூ.53,372 கோடியாக இருந்த போதும், இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.51,026 கோடியாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் 0.85 சதவீதம் சரிந்து ரூ.406.70-ஆக வர்த்தகமானது.