
வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய கனரக தொழிற்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், மானியம் வழங்குவதற்கான ஃபேம் திட்டம் கடந்த 2019 ஏப்ரல் 1-இல் தொடங்கப்பட்டது. முதலில் 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை என இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் மின்கலனின் திறனைப் பொருத்து கிலோ வாட் மின்திறனுக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனங்களுக்கான மானிய விலையின் உச்சவரம்பு உற்பத்தியாளா் விற்கும் விலையில் 40 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.