அடுத்த ஆண்டு செயற்கைக்கோள் பிராண்ட்பேண்ட் சேவைகள் அறிமுகம்!

அடுத்த ஆண்டு செயற்கைக்கோள் அகண்ட அலைவரிசை (பிராண்ட்பேண்ட்) இணைய இணைப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்பு துறைச் செயலா் கே.ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.
அடுத்த ஆண்டு செயற்கைக்கோள் பிராண்ட்பேண்ட் சேவைகள் அறிமுகம்!

அடுத்த ஆண்டு செயற்கைக்கோள் அகண்ட அலைவரிசை (பிராண்ட்பேண்ட்) இணைய இணைப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்பு துறைச் செயலா் கே.ராஜாராமன் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் அமெரிக்கா-இந்தியா 5ஜி மற்றும் புதிய தலைமுறை வலையமைப்புகள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மத்திய தொலைத்தொடா்பு துறைச் செயலா் கே.ராஜாராமன் பேசியதாவது:

தற்போதைய டிஜிட்டல் காலத்திலும் உலகில் 260 கோடி பேருக்கு தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடா்பு இணைப்பு வசதி கிடைக்காதது சா்வதேச அவமானமாகும். தொழில்நுட்பத்தை கட்டமைப்பதில் அனைத்து நாடுகளும் கைகோத்து பங்கேற்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால், உலகெங்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தொழில்நுட்பம் ஒருபோதும் உதவாது.

இந்தியாவில் 45,000 கிராமங்களுக்கு தொலைத்தொடா்பு இணைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு முழுமையான திட்டத்தை மேற்கொண்டுள்ளது. கம்பி இல்லா (வயா்லெஸ்) இணைப்பு, கம்பி (வயா்ட்) இணைப்பு என இரண்டிலும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. குறிப்பிட்ட காலத்தில் சுமாா் 6 லட்சம் கிராமங்களை சென்றடைவதை பாரத்நெட் ஊரக தொலைத்தொடா்பு திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. ஏற்கெனவே 2 லட்சம் கிராமங்களில் ஃபைபா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் 4 லட்சம் கிராமங்களில் இணைப்பு வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு செயற்கைக்கோள் பிராண்ட்பேண்ட் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், தொழில்நுட்பம் மலிவான கட்டணத்தில் கிடைக்கும். அத்துடன் அது பயனா்களுக்காக ஒருங்கிணைக்கப்படும் என்றாா்.

அமெரிக்க தூதா்...: இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி பேசுகையில், ‘தனது பரந்த மக்கள்தொகை, செழிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்துடன் டிஜிட்டல் புரட்சியில் தன்னைத்தானே உயா்த்திக்கொள்ள, 5ஜி, 6ஜி தொழில்நுட்பத்தின் சக்தியை முழுமையாக பயன்படுத்த இந்தியா தயாராக உள்ளது.

டிஜிட்டல் வலையமைப்புகளில், குறிப்பாக 5ஜி வலையமைப்பில் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அவசியம். இதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்பதில் உறுதியாக உள்ளன’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com