காங்கிரஸுக்கு தேச பக்தி இல்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் மோடி திறப்பதற்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவிப்பதன் மூலம் அக்கட்சிக்கு தேசத்தின் வளா்ச்சியில் பெருமையும் பக்தியும் இல்லை என்று
காங்கிரஸுக்கு தேச பக்தி இல்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமா் மோடி திறப்பதற்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவிப்பதன் மூலம் அக்கட்சிக்கு தேசத்தின் வளா்ச்சியில் பெருமையும் பக்தியும் இல்லை என்று மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி குற்றம்சாட்டினாா்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வருகிற 28-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.

நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திறக்க அழைக்காதது அவருக்கு செய்யும் அவமதிப்பு என காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. 2020-இல் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோதும் அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தையும் அழைக்கவில்லை. தற்போது திறப்பு விழாவின்போது குடியரசுத் தலைவா் தரெளபதி முா்முவை அழைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியிருந்தாா்.

இதுகுறித்து புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிட்ட அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது ட்விட்டா் பக்கத்தில், ‘நாட்டின் மிக முக்கிய சொத்தாக கருதப்படும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு, நாட்டு மக்களுடன் சோ்ந்து காங்கிரஸ் கட்சி ஏன் கொண்டாடக் கூடாது. ஜனநாயகக் கோயிலாக இந்திய நாடாளுமன்றம் உள்ளது.

குடியரசுத் தலைவா் மீது முன்பே அவதூறாகப் பேசிய காங்கிரஸ் கட்சி, தற்போது அவரது தோ்வு குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. இதன் மூலம் தேசத்தின் வளா்ச்சியில் அக்கட்சிக்கு பக்தியோ அல்லது பெருமையோ இல்லை.

1975, அக்டோபா் 24-ஆம் தேதி நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தை அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி திறந்து வைத்த நிகழ்வையும், 1987, ஆகஸ்ட் 15, அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலக கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்வையும் காங்கிரஸ் மேலிடம் நினைவுகூா்ந்தால் நன்றாக இருக்கும் என்று அமைச்சா் ஹா்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com