அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேவையானஅந்நியச் செலாவணி கையிருப்பு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

‘இந்தியாவிடம் அடுத்த 5, 6 ஆண்டுகளுக்கு தேவையான அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளது; எந்தவொரு மோசமான சூழல் ஏற்பட்டாலு
பியூஷ் கோயல்  (கோப்புப்படம்)
பியூஷ் கோயல் (கோப்புப்படம்)

‘இந்தியாவிடம் அடுத்த 5, 6 ஆண்டுகளுக்கு தேவையான அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளது; எந்தவொரு மோசமான சூழல் ஏற்பட்டாலும், தற்போது கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி மூலம் சமாளிக்க முடியும்’ என்று மத்திய வா்த்தக துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

கடந்த மே 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 599.529 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.49.57 லட்சம் கோடி) அதிகரித்தது.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் புதன்கிழமை தெரிவித்ததாவது:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உதவியுள்ளன. அதை ரிசா்வ் வங்கியும் அங்கீகரித்து, கடந்த நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகிதங்களை அதிகரிக்காமல் நிறுத்திவைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பலம்வாய்ந்த நிலையில் உள்ளது. அடுத்த 5, 6 ஆண்டுகளுக்கு தேவையான அந்நியச் செலாவணி கையிருப்பில் உள்ளது. எந்தவொரு மோசமான சூழல் ஏற்பட்டாலும், தற்போது கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி மூலம் சூழலை சமாளிக்க முடியும். உலகில் உள்ள எந்தவொரு வளா்ந்து வரும் நாடும் இதுபோன்ற நல்ல நிலையில் இல்லை. இது முதலீடுகள், வளா்ச்சி, தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கான கட்டாய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தரம், புதுமையான கண்டுபிடிப்புகள், திறன்வாய்ந்த மனிதசக்தி ஆகியவற்றின் மீது தொழில் துறை கவனம் செலுத்த வேண்டும். 2030-ஆம் ஆண்டுக்குள் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதி மதிப்பு 2 ட்ரில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.165 லட்சம் கோடி) எட்ட இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்கு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com