பஞ்சாப் எரிபொருள் நிலையங்களில் குவியும் ரூ.2,000 நோட்டுகள்

ரூ.2,000 நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியானதால், கடந்த சில நாள்களாக, எரிபொருள் நிலையங்களில் ரூ.2,000 நோட்டுகள் குவிந்துவருகின்றன.
பஞ்சாப் எரிபொருள் நிலையங்களில் குவியும் ரூ.2,000 நோட்டுகள்


சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில், 2000ம் அளவுக்கு எரிபொருள் நிரப்பினால், ரூ.2,000 நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியானதால், கடந்த சில நாள்களாக, எரிபொருள் நிலையங்களில் ரூ.2,000 நோட்டுகள் குவிந்துவருகின்றன.

ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் எரிபொருள் நிலையங்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இதனால், கடந்த ஒரு சில நாள்களாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை 10 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை குறைட்நதிருப்பதாகவும், தற்போது தங்களது எரிபொருள் விற்பனையில் 90 சதவிகிதம் ரொக்கமாகவே பெறப்படவதாகவும், குறிப்பாக 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக வருவதாகவும் பஞ்சாப் பெட்ரோலிய பொருள்கள் விநியோகஸ்தர்களின் கழகம் தெரிவித்துள்ளது.

இது அதிகரித்தால், நிச்சயம் எங்களுக்கு வருமான வரித்துறையிடமிருந்து சிக்கல் எழலாம். எனவே, விரைவில் இந்த முடிவை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது, ரயில்வே உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்கின்றன. மக்கள் வங்கிகளில் நேரடியாகச் சென்று 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க எரிபொருள் நிலையங்களில் பலரும் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக் கொள்வது அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com