ஜூன் மாதம் தொடங்கும் மழைக்காலம் எப்படி இருக்கும்?

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் தொடங்கும் மழைக்காலம் எப்படி இருக்கும்?

ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழையானது வழக்கம் போல சற்று தாமதமாகவேத் தொடங்கும்.  ஜூன் மாதத்தில் இயல்பு அளவை விடவும் குறைவான மழையே இருக்கும். இந்த மழைக்காலத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய 55 சதவிகித வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ காரணமாக, வரும் பருவமழைக் காலத்தில் குறைவான மழை கிடைக்கும் அபாயமும் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல வழிகளில் ஆராய்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலில், நாட்டில் வரும் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் பெய்யும் குறைவான மழை காரணமாக, காரீஃப் பயிர் சாகுபடி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படலாம். இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒருசில பகுதிகளைத் தவிர்த்து ஜூன் மாதத்தில் குறைவான மழை பெய்யவே வாய்ப்பிருப்பதாகவும், சில இடங்களில் மட்டுமே இயல்பான அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com