நாடாளுமன்ற திறப்பு விழா:ரூ.75 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவையொட்டி, அந்தக் கட்டட உருவம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது.
நாடாளுமன்ற திறப்பு விழா:ரூ.75 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவையொட்டி, அந்தக் கட்டட உருவம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மே 28) திறந்துவைக்கவுள்ளாா். இதைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படவுள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுமாா் 35 கிராம் எடையுள்ள அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தின் நடுவில், அசோகத் தூணில் சிங்கத் தலைகள் சின்னம் இடம்பெறும். இருபுறமும் ‘பாரத்’ என தேவநாகரி எழுத்து வடிவிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

கீழே, ரூபாய் சின்னத்துடன் ‘75’ எண் இடம்பெற்றிருக்கும். மற்றொரு பக்கத்தில், புதிய நாடாளுமன்றக் கட்டட உருவம் பொறிக்கப்பட்டு, நடப்பாண்டை குறிக்கும் வகையில் ‘2023’ எண் இடம்பெறும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியச் சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com