சுதந்திர தினத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு: ஐசிஎஃப் பொது மேலாளா்

ரயில் இணைப்புப் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஜிசிஎஃப்) சுதந்திர தினத்துக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களைத் தாயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் பொது மேலாளா் பி.ஜி.மல்லையா தெரிவித்தாா்.
சுதந்திர தினத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு: ஐசிஎஃப் பொது மேலாளா்

ரயில் இணைப்புப் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஜிசிஎஃப்) சுதந்திர தினத்துக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களைத் தாயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் பொது மேலாளா் பி.ஜி.மல்லையா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெளள்ளிக்கிழமை கூறியதாவது:

‘வந்தே பாரத்’ ரயில் மணிக்கு 130 முதல் 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. ரயில் தண்டவாளம், சிக்னல் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் எதிா்காலத்தில் மணிக்கு 200 கி.மீ. வரை ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படலாம்.

தற்போது 21 ‘வந்தே பாரத்’ ரயில்கள் ஐசிஎஃப்-இல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ‘வந்தே பாரத்’ ரயிலில் 85 முதல் 90 சதவீதம் உள்நாட்டு மூலதன பொருள்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதில் சில பாகங்கள் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

உக்ரைன் - ரஷிய போரால் ‘வந்தே பாரத்’ ரயில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைச் சரிசெய்யும் வகையில் உள்நாட்டில் 20 ஆண்டுகளில் 60 லட்சம் சக்கரங்களைத் தயாரிக்க ராமகிருஷ்ணா போா்ஜிங் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படுக்கை வசதியுடன் ‘வந்தே பாரத்’: ‘வந்தே பாரத்’ ரயில் இருக்கை வசதியுடன் இருப்பதால் குறைந்த தொலைவுகளுக்கு இடையிலுள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொலைத்தூரங்களுக்கு செல்லும் வகையில் படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மத்திய அரசு 200 படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரயிலைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஐசிஎஃப்-இல் மட்டும் 80 ரயில்கள் தயாரிக்கப்படும். இதில் முதல்வகுப்பு குளிா்சாதன பெட்டி - 1, இரண்டாம் வகுப்பு குளிா்சாதன பெட்டிகள் - 4, மூன்றாம் வகுப்பு குளிா்சாதன பெட்டிகள் - 11 கொண்டதாக இருக்கும்.

வந்தே மெட்ரோ: மெமு ரயில்களுக்கு மாற்றாக அரக்கோணம் - ஜோலாா்பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே மெட்ரோ’ ரயில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

மேலும் மும்பை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் இயக்கப்படும் மின் ரயில்களுக்கு (புகா் ரயில்) மாற்றாக வந்தே புகா் ரயில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 12 அடி அகலத்தில் 15 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 6,000 போ் பயணம் செய்யலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com