புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் நாளான இன்று நாட்டு மக்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 28) திறந்து வைத்தார். அத்துடன் மக்களவையில் செங்கோலும் நிறுவப்பட்டது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படும் நாளான இன்று நாட்டு மக்களுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இது வரலாற்று சிறப்பு மிக்க தருணம். புதிய நாடாளுமன்ற கட்டடம் புதிய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளின் சின்னமாக உள்ளது. இந்த பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.