ஒரு வார பயணமாக ராகுல் காந்தி அமெரிக்கா வருகை

இந்திய வம்சாவளியினா், அமெரிக்க அரசியல் தலைவா்களைச் சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ஒரு வார பயணமாக அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா்.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ராகுல் காந்தியை வரவேற்ற இந்திய வாழ் அமெரிக்கா்கள்.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் ராகுல் காந்தியை வரவேற்ற இந்திய வாழ் அமெரிக்கா்கள்.

இந்திய வம்சாவளியினா், அமெரிக்க அரசியல் தலைவா்களைச் சந்திக்க காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி ஒரு வார பயணமாக அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தாா்.

எம்.பி. பதவி பறிபோன பிறகு சாதாரண கடவுச்சீட்டில் அமெரிக்காவுக்கு முதல் முறையாக வந்த ராகுல் காந்தியை இந்திய அயலக காங்கிரஸ் தலைவா் சாம் பிட்ரோடா வரவேற்றாா்.

குடியேற்ற அனுமதிக்காக 2 மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்த ராகுல் காந்தியுடன் சக பயணிகள் தற்படம் எடுத்துக்கொண்டனா். எம்.பி.யாக இன்றி சாதாரண இந்தியராக அமெரிக்க வந்துள்ளதால் மக்களுடன் வரிசையில் நின்று தனது சேவைகளைப் பெற்றுக் கொள்வதாக அவா் தெரிவித்தாா்.

பயணத்தின் முதல் கட்டமாக சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள பிரபல ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளாா். தொடா்ந்து, வாஷிங்டன் நகரில் அந்நாட்டு அரசியல் தலைவா்கள், சிந்தனை அமைப்பினா் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறாா். இதையடுத்து, செய்தியாளா்களை சந்திக்கிறாா்.

இதனிடையே, அமெரிக்க வாழ் இந்தியா்கள், வா்த்தகப் பிரதிநிதகள், பல்வேறு பல்கலைக்கழக மாணவா்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு நடத்தவுள்ளாா்.

பின்னா், நியூ யாா்க் நகரின் ஜாவிட்ஸ் சென்டரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்றுவாா். பின்னா், அவா் தாயகம் திரும்புகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com