இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள்: அமெரிக்காவில் ராகுல் காந்தி

இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தாக்கப்படுவதாக சான் பிரான்சிஸ்கோவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள்: அமெரிக்காவில் ராகுல் காந்தி

இந்தியாவில் சிறுபான்மையினர்கள் தாக்கப்படுவதாக சான் பிரான்சிஸ்கோவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அமெரிக்காவுக்கு ஒரு வார பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, முதல் நிகழ்வாக சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள பிரபல ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதாவது:

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒற்றுமை யாத்திரையை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், யாத்திரையின் முன்பு அவர்கள் முயற்சி பழிக்கவில்லை.

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்னைகளை மறைக்கவே செங்கோல், நாடாளுமன்ற திறப்பு போன்றவை மோடி அரசு செய்து வருகின்றது.

எனக்குதான் எல்லாம் தெரியும் என்பது போன்று நாம் இருக்கக் கூடாது என்று பலர் கூறியுள்ளனர். ஆனால்,  இந்தியாவில்  எல்லாம் தெரியும் என்று நினைக்கும் கூட்டம் உள்ளது. அதில் ஒருவர்தான் பிரதமர் மோடி. கடவுள் வந்து மோடி பக்கத்தில் அமர்ந்தால், பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என்று கடவுளிடம் விளக்க தொடங்குவார் பிரதமர்.

இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும் ஆதரவற்று நிற்கின்றனர். இந்தியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் வெறுப்பதை விரும்பமாட்டார்கள். ஒரு சிறிய கூட்டம்தான் வெறுப்பை பரப்புகிறது. முஸ்லீம்கள் எப்படி தாக்கப்படுவதாக உணர்கின்றீகளோ, அப்படித்தான் சீக்கியவர்கள், கிறிஸ்துவர்கள், தலித்துகளும் உணர்கின்றார்கள்.

1980-களில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ, அதுதான் முஸ்லீம்களுக்கு இன்று இந்தியாவில் நடக்கிறது எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com