
பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
கடந்த 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டவுடன், தில்லி ஜந்தா் மந்தரில் இருந்து இவா்கள் தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கொண்டு சென்ற தில்லி போலீஸாா், சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டு குறித்து பிரிஜ் பூஷண் பேசுகையில், என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன். உங்களிடம்(வீராங்கனைகள்) ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்பியுங்கள். நான் தண்டனை பெறத் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...