பாஜகவைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர்!

மத்தியப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக முன்னாள் எல்எல்ஏவும், பாஜக இளைஞர் அணியின் முன்னாள் மாவட்டத் தலைவரும்  காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்தியப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக முன்னாள் எல்எல்ஏவும், பாஜக இளைஞர் அணியின் முன்னாள் மாவட்டத் தலைவரும்  காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

மொரீனா மாவட்டத்தில் உள்ள அம்பாஹ் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ, கமலேஷ் சுமன் மற்றும் பாஜக யுவ மோர்ச்சாவின் முன்னாள் தலைவர் நரேஷ் சிங் தோமர் ஆகியோர் மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாகியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ சுமன் கூறுகையில்,

பாரதிய ஜனதாவின் செயல்பாடு முன்னைபோல் இல்லை. முன்பு கட்சி அமைப்பு முறைப்படி இயங்கி வந்தது. ஆனால் தற்போது கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பழைய தொழிலாளர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. அதனால் அப்பகுதி மக்களுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை. பொதுமக்களின் பணியை முதல்வர் கவனம் செலுத்துவதில்லை அதனால்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தோம் என்றார்.

மறுபுறம், பாஜகவின் தொடர் புறக்கணிப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக முன்னாள் மாவட்ட தலைவர் தோமர் தெரிவித்தார். கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதைச் செய்வதாக அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com