இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை:  சஞ்சய் ரௌத்

இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை: சஞ்சய் ரௌத்

இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 
Published on

இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். 

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்தியா கூட்டணி குறித்து அமித் ஷா கவலைப்படத் தேவையில்லை. அவர் இப்போது 5 மாநிலத் தேர்தல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் திறமையானவர்கள். 2024 மக்களவைத் தேர்தலுக்காக இந்திய கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இப்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் காங்கிரஸ்தான் முன்னணியில் இருக்கிறது. நாம் இந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியவில்லை என்றால் மக்களவைத் தேர்தலுக்கு எப்படித் தயாராவது? 

5 மாநிலத் தேர்தல்கள் முடிந்ததும் மீண்டும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்' என்றார். 

முன்னதாக, மக்களவைத் தோ்தலுக்காக எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் ஒரே நோக்கம் பிரதமா் மோடியை எதிா்ப்பது மட்டுமே என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com