ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு தலைமை நீதிபதி அதிருப்தி

ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் பேரவையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறியது:

“உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்னதாகவே ஆளுநர்கள் செயலாற்ற வேண்டும். நீதிமன்றம் வந்த பிறகு மட்டுமே ஆளுநர்கள் செயல்படுவதற்கு முடிவு காண வேண்டும்.

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பஞ்சாப் ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விரைவில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கை வெளியிடப்படும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், பஞ்சாப் அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com