திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் ப. சிதம்பரம் வீட்டில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் ஆகியோருடன் காணொலி வாயிலாக ப.சிதம்பரம் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக கார்கேவின் அறிவுறுத்தலின்படி ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுகிறார்.
மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை மறுநாள்(மார்ச் 5) கடைசி நாளாகும்.
அதற்கு முன்னதாக திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு மாநிலங்களவை இடம் இருக்குமா? என்பது இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரவைத் தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் வரை கேட்கப்பட்டு வரும் நிலையில் திமுக 28 தொகுதிகள் மட்டுமே வழங்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
P. Chidambaram discussion with Congress executives; he is going to meet CM stalin
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

காங்கிரஸ் வேட்பாளர்கள் புறக்கணிப்பு! கோவையில் திமுகவுக்கு மட்டும் ப. சிதம்பரம் பிரசாரம்!

புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!

மு.க. ஸ்டாலினுடன் பேசியது என்ன? - செல்வப்பெருந்தகை பதில்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


