பத்ரிநாத்தில் இருந்து பக்தர்களுடன் திரும்பிய ஹெலிகாப்டர் விபத்து!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்திஅன்பில் மகேஸுக்கு போலீஸ் காவல் கோரிய மனு! நவ. 2-ல் தீர்ப்பு!வங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு பற்றி...

P. Chidambaram meets with Chief Minister M.K. Stalin

கோப்புப்படம் - X / mk stalin

Updated On :

சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருக்கின்றனர்.

முன்னதாக, ப. சிதம்பரம், செல்வப்பெருந்தகையுடன் இணைந்து காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னதாக திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இறுதி செய்ய முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுமா? என்பது இன்று முடிவாகும் எனக் கூறப்படுகிறது.

கார்கேவின் அறிவுறுத்தலின்படி ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல சென்னை ப. சிதம்பரம் இல்லத்தில் இருந்து முதல்வர் வீட்டிற்கு ப. சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் ஒரே காரில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

P. chidambaram meets Chief minister MK stalin on alliance for TN election 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.