இஸ்லாமியர் நலன்களுக்கு துரோகம் செய்யும் ஒஐசி: மெஹபூபா கண்டனம்!
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை ஒஐசி கண்டிக்காதது பற்றி..


ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்கள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒஐசி) மௌனம் காத்ததற்காக மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அப்பட்டமான ஆக்கிரமிப்பைச் செய்யும்போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(ஒஐசி) மௌனம் காப்பது மிகவும் கவலையளிக்கிறது.
ஈரானின் உச்ச தலைவரின் தியாகம் குறித்து அதன் மௌனம் மற்றும் ஈரானின் மீது பழிசுமத்தும் முயற்சி கவலையளிப்பதோடு, அவமானகரமானது.
ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஒஐசி தெஹ்ரான் மீது பழியை மாற்றியதாக அவர் கூறினார்.
ஈரான் மீதான தாக்குதலைக் கண்டிப்பதற்குப் பதிலாக, மௌனம் காப்பதோடு, எப்ஸ்டீன் கோப்புகளைச் சேர்ந்தவர்களை மறைமுகமாக ஆதரித்துள்ளது.
ஒஐசி அமைப்பு இஸ்லாமியர்கள் நலன்களுக்குப் பெரிய துரோகம் செய்துள்ளதாக அவர் கண்டித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி சனிக்கிழமை அதிகாலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...