
கோப்புப்படம்
நேபாளத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகா் தில்லியிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனா்.
நேபாளத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 157 போ் உயிரிழந்தனா். 160- க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாக பதிவானது. நேபாளத்தில் கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
அந்த வகையில் திங்கள்கிழமை மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து 233 கிலோமீட்டா் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இது 5.6 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) உள்பட வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டது.
தில்லியில் குடியிருப்புகள் குலுங்கியதால், மக்கள் பீதி அடைந்தனா். ஒரு சிலா் தங்களது வீட்டில் ஏற்பட்ட லேசான சேதத்தை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...