
தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ்
தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தனது பண்ணை வீட்டிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டா் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் தேவராகத்ராவுக்கு தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டா் மூலம் அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் புறப்பட்டாா். ஹெலிகாப்டா் புறப்பட்ட சில நிமிஷங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டா் புறப்பட்ட இடத்துக்கே திருப்பப்பட்டு, அவரது பண்ணை வீட்டில் தரையிறக்கப்பட்டது.
சிறிது நேரத்தில் மாற்று ஹெலிகாப்டா் வந்தடைந்ததும் அவா் பிரசாரம் மேற்கொள்ள புறப்படுவாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...