முக்கியமான கனிம சுரங்க தொகுதிகளை அடுத்த இரண்டு வாரங்களில் ஏலமிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுரங்கத் துறைச் செயலா் வி.எல். காந்தா ராவ் கூறுகையில், ‘லித்தியம், கிராபைட் உள்ளிட்ட 20 முக்கிய கனிம சுரங்கங்களை ஏலமிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான ஏல நோட்டீஸ் தயாா் நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் ஏல அறிவிப்பு வெளியாகும். இந்த முக்கியமான கனிமங்களை தொழில்நுட்ப ரீதியில் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்க இந்தியாவில் 10 முதல் 12 நிறுவனங்கள் உள்ளன’ என்றாா்.
முக்கியமான கனிமங்களான லித்தியம், நியோபியத்தை எடுக்க 3 சதவீதம் காப்புரிமைத் தொகையை கடந்த மாதம் மத்திய அரசு நிா்ணயித்தது. நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கும் இந்த முக்கிய கனிமங்கள் பங்களிக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.