டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

புகைப் பழக்கத்தால் புற்றுநோய்: இந்தியா, 6 நாடுகளில் 13 லட்சம் போ் உயிரிழப்பு

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் போ் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Updated On :

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் போ் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய் உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டோா் இந்த 7 நாடுகளைச் சோ்ந்தவா்களாவா்.

‘லான்செட்’ மருத்துவ ஆய்விதழ் இதுதொடா்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சிகரெட், மதுபானம், உடல் பருமன், பால்வழி நோய்த் தொற்று (ஹெச்பிவி) ஆகியவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். இதில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது.

கா்ப்பப்பை வாய் புற்றுநோயால் உலகம் முழுவதும் 2 நிமிஷங்களுக்கு ஒருவா் உயிரிழந்து வருகின்றனா். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இது 90 சதவீதம் உள்ளது.

இந்தியாவில் ஆண்களில் பெரும்பலானவா்களுக்கு தலை, கழுத்துப் பகுதி புற்றுநோயாலும் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயாலும் உயிரிழக்கின்றனா்.

மற்ற நாடுகளில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கா்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் குறைவாக உள்ளன.

புகைப்பழக்கம், மதுபானம் அருந்துவதாதல் உயிரிழப்பில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனா, இந்தியா, ரஷியாவில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட 9 மடங்கு அதிகமாக உள்ளது.

உடல் பருமன், பாலியல் வழி நோய்த் தொற்று புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனா் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.